கொரோனா தொற்றுக்கு பின்னர் நாடுகள் பொருளாதார ரீதியில் வளர்சியடைய பெரும் முயற்சி….
கொவிட் – 19 தொற்றுக்கு பின்னர் 2021 ஆம் ஆண்டு தொடக்கம் தமது பொருளாதார வளர்ச்சி வேகத்தை மேம்படுத்துவதற்காக நாடுகள் முயற்சிப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் 6.9 சதவீதமாக பொருளாதார வளர்ச்சி வேகம் அமையும்.
இருப்பினும், பொதுமக்களுக்கு தடுப்பூசி ஏற்றுதல் அந்தந்த நாடுகளின் நிதி நிலைமை தொடர்பாக வளர்ச்சி வேகம் மாற்றமடைய கூடும் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று காலப்பகுதியில் உலக பொருளாதார வளர்ச்சியில் முக்கிய இடம்பெறும். ஜெர்மன் பிரான்ஸ், ஜப்பான், பிரிட்டன், இத்தாலி, ரஷ்யா, பிரேஸில் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் குறைவான பொருளாதார வளர்சியை காணக்கூடியதாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.