Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

நாடளாவரீதியில் 5000 கிராம பாலங்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டத்தில் அதிகளவு பாலங்களுக்கான கோரிக்கைகள் வந்துள்ளமையால் குறித்த வேலைத்திட்டத்தில் தற்பொழுது 12,000 பாலங்கள் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத் தீர்மானத்தின் அடிப்படையில் 12,000 பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளது. குறித்த செயல்திட்டம் 4 வருடத்தில் பகுதி பகுதியாக பூர்த்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாலமும் வாகனங்கள் செல்லும் வகையில் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

கிராம மக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாக்கப்பட வேண்டும் என்பதை முனைப்பாக கொண்டு “ஜனாதிபதியின் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான செயலணி” திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி வருகின்றது.

உற்பத்தி பொருட்களை சேதாரமுமின்றி சந்தைக்கு கொண்டு செல்வதில் கிராமத்து மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைஅடையாளம் கண்டுகொண்டதையடுத்து “12,000 பாலங்கள்” உருவாக்கும் தேசிய செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் #பசில் ராஜபக்ச

Related posts

Leave a Comment