Latest | சமீபத்தியது 

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோர் – பிரவேசிப்போருக்கு என்டிஜன் பரிசோதனை…

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோர் மற்றும் பிரவேசிப்போரை என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும் ஊடக பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 வைரசு தொற்று மாகாண மற்றும் பிரதேசங்களில் பரவுவதைதடுப்பதற்காக இன்று (29) நண்பகல்12 மணி முதல் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் மற்றும் பிரவேசிப்போர் என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

கொவிட் 19 வைரசு பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்

Related posts

Leave a Comment