Uncategorized 

இராணிவத்தை தோட்டத்தில் முறிந்து விழுந்தது பாரிய மரம் – தாயும், மகளும் காயம்!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய இராணிவத்தை தோட்டத்தில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒரு வீடு சேதமடைந்துள்ளது.

அத்துடன், வீட்டிக்குள் இருந்த தாயும் (வயது 38) , மகளும் (வயது 06) காயமடைந்துள்ளனர். இருவரும் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

இப்பிரதேசத்தில் வீசிய கடும் காற்று காரணமாக வீட்டிற்கு பின்புறத்தில் இருந்த மிகவும் பழமை வாய்ந்த பாரிய மரம் முறிந்து வீட்டின் சமையலறை பகுதியில் விழுந்துள்ளது.

அவ்வேளையில் சமையலறையில் இருந்த 38 வயதுடைய தாயும், 6 வயதுடைய மகளும் காயமடைந்ததாகவும் அதனை தொடர்ந்து அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

Related posts

Leave a Comment