Latest | சமீபத்தியது World | உலகம் 

விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில் மூழ்கும் நிலைக்கு மத்தியில் ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கை ஆரம்பம்…

கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட நீர் ஒழுக்கின்காரணமாக தற்போது கப்பல் கடலில் மூழ்க ஆரம்பித்திருப்பதாக அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால் வளர்ப்பு, கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி, பல நாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்கஇராஜாங்க அமைச்சர் கஞ்சனா விஜேசேகர தெரிவித்தார்.

கடந்த 20 ஆம் திகதி தீப்பற்றிய இந்த கப்பலுக்குள் பிரவேசித்துள்ள மீட்புக் குழுவினர் கப்பல் அதன் தற்போதைய நிலையில் மூழ்கத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் காஞ்சனா விஜேசேகர மேலும் கூறினார்.Shipsssssssssssssssssssஇதேவேளை கப்பலை ஆழ் கடலுக்கு இழுத்துச் செல்வதற்கு வசதி செய்வதற்காக விசேட குழு இன்று காலை கப்பலுக்குள் நுழைந்ததாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்..

கப்பலினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பை கவனத்திற் கொண்டு கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று உத்தரவு பிறப்பித்தார். தொழில்நுட்ப காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, சட்டமா அதிபரின் ஆலோசனைகளின் பிரகாரம், சமுத்திர பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவருக்கு உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment