Uncategorized 

‘பயணத்தடைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்படவுள்ள சேவைகள்’

பயணத்தடை நீடிக்கப்பட்டாலும் தற்போது முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் – என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு வருமாறு,” உணவு மற்றும் அதியாவசிய பொருட்கள் நடமாடும் வாகன சேவை ஊடாக மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவருகின்றது. அப்பணி அவ்வாறே தொடரும்.

நிர்மாணப்பணிகளை முன்னெடுத்துச்செல்வதற்கும், ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் இதர தொழிற்சாலைகளில் இடம்பெறும் பணிகளை அவ்வாறே முன்னெடுத்துச்செல்வதற்கும் அனுமதி வழங்கப்படும்.

விவசாய நடவடிக்கையை வழமைபோல் முன்னெடுக்க முடியும். சேதன பசளை உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் உற்பத்தி நடவடிக்கையை தொடர்வதற்கு அனுமதி வழங்கப்படும்.

Related posts

Leave a Comment