Sport | விளையாட்டு World | உலகம் 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்தக்கோரி ஜப்பானிய மக்கள் போராட்டம்…

ஜப்பானின் டோக்கியோ நகரத்தில் இந்த வருடம் இடம்பெறவுள்ள ‘2020-டோக்கியோ ஒலிம்பிக்’ போட்டிக்கு அந்த நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜுலை மாதம் 23ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு எதிர்ப்பைத் தெரிவித்து 3 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையொப்பம் இட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டிகளை நடாத்துவது ஆபத்தானது என அந்த நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர். போட்டிகளில் முன்பயிற்சிகளுக்காக ஜப்பான் வந்துள்ள விளையாட்டு வீர வீராங்கணைகளுக்கு தங்குமிட வசதி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள். ஒலிம்பிக் போட்டிகளுக்காக ஜப்பானில் 500க்கும் அதிகமான நகரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த நகரத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் ஒலிம்பிக் போட்டிகளை இந்த காலப்பகுதியில் நடத்துவதற்கு விருப்பம் கொண்டிருக்கவில்லை.

Read More
Politics | அரசியல் World | உலகம் 

லெபனான் நாட்டில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்

லெபனான் நாட்டில் இருந்து இஸ்ரேல் மீது 3 ராக்கெட்டுகள் ஏவப்பட்டது. இந்த தாக்குதலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று இஸ்ரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. ஜெருசலேம்,இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. இந்த காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது ஹமாஸ் அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். ஹமாஸ் பயங்கரவாதிகளில் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவமும் தக்கபதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையில், ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே…

Read More
Politics | அரசியல் World | உலகம் 

சென்னையில் அனைத்து இடங்களிலும் திமுக முன்னணி

தமிழக சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ள நிலையில், சென்னையின் மற்ற 15 தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது. கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார். அதேபோல் அக்கட்சியின் இளைஞரணி தலைவரான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார்.

Read More
Latest | சமீபத்தியது World | உலகம் 

உலகக் குரல் நாள் இன்று!…

உலகக் குரல் நாள் (World Voice Day (WVD) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16 இல் கடைபிடிக்கப்படுகிறது. குரல் என்ற இயல்நிகழ்வு கொண்டாட்டமான இது, அர்ப்பணிப்புடன் நடைபெறும் உலகளாவிய ஆண்டு நிகழ்வு ஆகும். அனைத்து மக்களின் அன்றாட வாழ்க்கையில், குரல் ஒரு மகத்தான முக்கியத்துவத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், “பிரேசிலியன் காது மூக்கு தொண்டை மற்றும் குரல் சங்கம்” (Brazilian Society of Laryngology and Voice) 1999 இல் முதன்முதலாக தொடங்கப்பட்டது.

Read More
Latest | சமீபத்தியது World | உலகம் 

வரையறையற்ற அதிவேக இணைய சேவை விரைவில்…

வரையறையற்ற இணைய சேவைகளை வழங்குவதற்காக தொடர்புடைய சேவை வழங்குனர்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தங்களது திட்டங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் வாரம் முதல் குறித்த பெக்கேஜை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இணையதள சேவை வழங்குனர்கள் சமர்ப்பித்த திட்டங்களை பரிசீலித்த பிறகு, அவற்றை செயல்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது. இதனூடாக கையடக்க தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு அதிவேக இணைய வசதிகளை தொடர்ந்து வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் World | உலகம் 

இலங்கையும், நியூசிலாந்தும் வெளிநாட்டு அமைச்சு ஆலோசனைகளை அங்குரார்ப்பணம்….

இலங்கைக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான முதல் சுற்று வெளிநாட்டு அமைச்சு ஆலோசனைகள் நேற்று நடைபெற்றது. இது தொடர்பாக வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: ஊடக வெளியீடு இலங்கையும், நியூசிலாந்தும் வெளிநாட்டு அமைச்சு ஆலோசனைகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்தன இலங்கைக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான முதல் சுற்று வெளிநாட்டு அமைச்சு ஆலோசனைகள் 2021 ஏப்ரல் 08ஆந் திகதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு, வெளிநாட்டு அமைச்சின் கிழக்கு ஆசியப் பிரிவின் பதில் பணிப்பாளர் நாயகம் ரோஹன அம்பகொல்ல மற்றும் நியூசிலாந்தின் வெளிநாட்டு மற்றும் வர்த்தக அமைச்சின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிரிவின் பிரதேச முகாமையாளர் அண்ட்ரூ நீட்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். பரஸ்பரம் ஆர்வமுள்ள பரந்த அளவிலான விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன. வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, பாதுகாப்பு, மக்களுக்கிடையிலான பரிமாற்றம், கல்வி முதல் விளையாட்டு மற்றும் சுற்றுலா…

Read More