Entertainment | பொழுதுபோக்கு, 

திருமதி உலக அழகி ஜுரி கைது!

திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி, கறுவாத்தோட்டம் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். திருமதி இலங்கை அழகிப் போட்டியில் வெற்றிபெற்ற புஷ்பிகா டி சில்வாவால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமதி இலங்கை அழகிப் போட்டி கடந்த 4 ஆம் திகதி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றிபெற்ற புஷ்பிகா டி சில்வாவுக்கு வெற்றி மகுடம் சூட்டப்பட்டது. மறுகணமே அது மீள பறிக்கப்பட்டு, 2ஆவது வெற்றியாளருக்கு வழங்கப்பட்டது. புஷ்பிகா டி சில்வா விவாகரத்து பெற்றவர் என்பதை அடிப்படையாகக்கொண்டே இவ்வாறு பட்டம் பறிக்கப்பட்டது. எனினும், அவர் விவாகரத்து பெற்றவர் என்பது நிருபிக்கப்படவில்ல.இதனால் மீண்டும் புஷ்பிகாவுக்கே பட்டம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More
Latest | சமீபத்தியது 

புத்தாண்டு காலத்தில் போலி நாணயத்தாள் பரிமாற்றம் – பொலிஸார் மீண்டும் நினைவூட்டல்…

புத்தாண்டு காலத்தில் போலி நாணயத்தாள்கள் பரிமாற்றம் இடம்பெறக்கூடும் என்பதனால் இது தொடர்பாக மிக அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். இவ்வாறான போலி நாணயத்தாள்கள் உங்கள் கைகளில் கிடைத்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 1000 ரூபா போலி நாணயமொன்றை கையில் வைத்திருந்த 28 வயதுடைய நபரொருவர் நேற்றைய தினம் (7) பனாகொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் 1000 ரூபா போலி நாணயத் தாள் ஒன்றை கடையில் கொடுத்து பொருட்களை வாங்க முயன்றபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதேவேளை இந்தப் புத்தாண்டு காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும், வாகன விபத்துக்களை குறைத்துக் கொள்ளவும் பொதுமக்கள்…

Read More
Latest | சமீபத்தியது 

புறக்கோட்டை மிதக்கும் சந்தைத் தொகுதி மீண்டும் பொது மக்களிடம் கையளிப்பு…

எந்தவித பராமரிப்பும் இல்லாமல் கைவிடப்பட்டிருந்த புறக்கோட்டை மிதக்கும் சந்தைத் தொகுதி மறு சீரமைக்கப்பட்டு இன்று மீண்டும் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. 2015ஆம் ஆண்டிற்குப் பின்னர் அங்கு எந்த விதமான பராமரிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. கடந்த அரசாங்க காலத்தில் 103 வர்த்தக நிலையங்களில் 80 சதவீதமானவை மூடப்பட்ட நிலையில் இதனை மீள மறுசீரமைப்பதற்காக தற்போதைய அரசாங்கம் 35 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More
Latest | சமீபத்தியது 

சந்தையில் மோசடிகள் குறித்து தகவல்களை வழங்க விசேட இலக்கம் – 1977…

பண்டிகை காலத்தில் சந்தையில் நிலவும் மோசடி செயற்பாடுகள் தொடர்பாக 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் அறிவிக்குமாறு நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. பண்டிகை காலப்பகுதியில் சந்தைக்கு வரும் காலாவதியான மற்றும் பயன்பாட்டுக்கு பொருத்தமற்ற பொருட்களை கண்டறிந்து அதற்கெதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைபடுத்தும் நோக்கில் மார்ச் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி வைர விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. அனைத்து அதிகாரிகளையும் ஈடுப்படுத்தி நாடு முழுவதிலும் உள்ள மாவட்டங்களில் தேடுதல் மற்றும் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வதில் அதிகார சபை ஈடுப்பட்டுள்ளதாக சபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார். இதற்கமைவாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கிய மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் களஞ்சியசாலைகளை பரிசோதனை செய்வதற்காக முற்ருகையிடுவதாக அவர் கூறினார். காலாவதியான மற்றும் தகவல்களில் மாற்றம்…

Read More
Latest | சமீபத்தியது 

பாகிஸ்தான் கூட்டு பதவி நிலை குழுத் தலைவர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு வாழ்த்து…

பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வுகளில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, ராவல்பிண்டியில் அமைந்துள்ள பாகிஸ்தான் கூட்டு பதவிநிலை தலைமையகத்தில் கூட்டு பதவி நிலை குழு தலைமை தலைவர் ஜெனரல் ஜெனரல் நதீம் ரசாவை சந்தித்தார். இதன்போது இருதரப்பு தொழில்முறை ஆர்வம், பிராந்திய பாதுகாப்பு நிலைமை, பயிற்சித் திட்டங்களின் பரிமாற்றம் மற்றும் இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. ஜெனரல் ஷவேந்திர சில்வா பாகிஸ்தான் ஆயுதப்படைகளின் தொழில் திறனைப் பாராட்டியதுடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தான் இராணுவத்தினர் செய்த தியாகங்களை நினைவு கூர்ந்தார். எதிர்காலத்திலும் இரு அமைப்புகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு நீடிக்க வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்தார். பாகிஸ்தான் நாட்டின் பதவி நிலை அலுவலகத்துக்கு வருகை தந்த இலங்கை பிரமுகர்களுக்கு முன்னரங்கு பாதுகாவலர்…

Read More

கடற்றொழில் அமைச்சர் – இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் இடையே விசேட சந்திப்பு…

இலங்கையிலுள்ள நான்கு பிரதான மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஆர்வமாக இருப்பதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவரூட் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான அதிகாரிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கடற்றொழில் அமைச்சில் நேற்று (07.04.2021) சந்தித்தபோதே பிரான்ஸ் தூதுவர் இவ்வாறு தெரிவத்தார். கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை போன்ற துறைகளில் மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்ட இச்சந்திப்பின் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த தூதுவர், தென் பகுதியிலுள்ள காலி, பேருவளை, குடாவெல்ல மற்றும் குரானவெல்ல ஆகிய மீன்பிடி துறைமுகங்களை அபிவருத்தி செய்வதற்கு தமது அரசாங்கம் விரும்புவமாகவும் அதற்கான ஆய்வு நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் அதற்கான பணிகளை ஆரம்பிக்க முடியுமெனவும் தெரிவித்தார். அத்துடன் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணத்தில் நன்னீர் மீன்பிடி துறையை அபிவிருத்தி செய்வதற்கு ஆர்வமாக இருப்பதாக தெரிவித்த…

Read More