Uncategorized 

எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு எதிர்பார்க்கவில்லை என இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு இராணுவத்தளபதி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். www.kuruvi.lk

Read More
Latest | சமீபத்தியது 

கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சை பெற்றுவருபவர்களில் மேலும் 184 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

இதன்படி வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 91,456 ஆக அதிகரித்துள்ளது. 2,513 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

Read More
Latest | சமீபத்தியது 

இளவரசர் பிலிப் காலமானார்!

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் இன்று காலமானார். அவருக்கு வயது 99. இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் மிக அதிக காலம் இளவரசராக இருந்தவர் பிலிப். கடந்த சில மாதங்களாக இளவரசர் பிலிப் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். தனது வின்ஸ்டர் கேசில் அரச மாளிகையில் இளவரசர் பிலிப்பின் உயிர் பிரிந்தது.

Read More
Latest | சமீபத்தியது 

இந்திய–இலங்கை பொலிஸ்பிரதானிகள்மாநாடு….

ஊடக அறிக்கை இந்திய இலங்கை பொலிஸ் தலைமையதிகாரிகள் கலந்துகொண்ட பேராளர்கள் மட்டத்திலான முதலாவது மெய்நிகர் பொலிஸ் பிரதானிகள் மாநாடு இன்று (08 ஏப்ரல் 2021) நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவை குறிக்கும் வகையில் இப்பேச்சுக்கள் சுமூகமாகவும் வினைத்திறன் மிக்கவகையிலும் இடம்பெற்றன. புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் இந்திய தரப்பினருக்கு தலைமை தாங்கிய அதேவேளை இலங்கை பொலிஸ் மா அதிபர் தனது நாட்டின் பேராளர்களுக்கு தலைமை தாங்கியிருந்தார். இருநாடுகளுக்கிடையேயான மிகக்குறுகிய கடல்பாதையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுவோர் மற்றும் ஏனைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக இருதரப்பினராலும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பாராட்டிய அதேவேளை, உளவுத்துறை சார்ந்த மற்றும் ஏனைய பின்னூட்ட கருத்துக்களை நிகழ்நேரத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை இங்கு வலியுறுத்தியிருந்தனர். உலகளாவிய பயங்கரவாத குழுக்கள் மற்றும் ஒழிந்திருக்கும் குற்றவாளிகள் போன்றோர் எங்கிருந்தாலும் அவர்களுக்கு எதிராக…

Read More
Latest | சமீபத்தியது 

சமுர்த்தி பயனர்களுக்கு நிவாரண கொடுப்பனவு வழங்க தீர்மானம்…

சமுர்த்தி பயனர்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More
Latest | சமீபத்தியது World | உலகம் 

வரையறையற்ற அதிவேக இணைய சேவை விரைவில்…

வரையறையற்ற இணைய சேவைகளை வழங்குவதற்காக தொடர்புடைய சேவை வழங்குனர்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தங்களது திட்டங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் வாரம் முதல் குறித்த பெக்கேஜை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இணையதள சேவை வழங்குனர்கள் சமர்ப்பித்த திட்டங்களை பரிசீலித்த பிறகு, அவற்றை செயல்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது. இதனூடாக கையடக்க தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு அதிவேக இணைய வசதிகளை தொடர்ந்து வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Read More
Latest | சமீபத்தியது 

800 ரூபாவிற்கு மிளகு கொள்வனவு…

ஒரு கிலோ மிளகை 800 ரூபாவிற்கு கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு உள்ளிட்ட சிறிய பெருந்தோட்ட உற்பத்தி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் இந்த கொள்வனவு இடம்பெறுகின்றது. இந்த கொள்வனவில் அரசாங்கம் தலையிடுவதற்கு முன்னர் இடை தரகர்களினால் 1 கிலோ மிளகு 300 ரூபாவிற்கும், 400 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்யப்பட்டது. நாடு முழுவதும் மிளகு உற்பத்தியாளர்கள் எதிர்க்கொண்ட பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு அரசாங்கம் மிளகு கொள்வனவை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் World | உலகம் 

இலங்கையும், நியூசிலாந்தும் வெளிநாட்டு அமைச்சு ஆலோசனைகளை அங்குரார்ப்பணம்….

இலங்கைக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான முதல் சுற்று வெளிநாட்டு அமைச்சு ஆலோசனைகள் நேற்று நடைபெற்றது. இது தொடர்பாக வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: ஊடக வெளியீடு இலங்கையும், நியூசிலாந்தும் வெளிநாட்டு அமைச்சு ஆலோசனைகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்தன இலங்கைக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான முதல் சுற்று வெளிநாட்டு அமைச்சு ஆலோசனைகள் 2021 ஏப்ரல் 08ஆந் திகதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு, வெளிநாட்டு அமைச்சின் கிழக்கு ஆசியப் பிரிவின் பதில் பணிப்பாளர் நாயகம் ரோஹன அம்பகொல்ல மற்றும் நியூசிலாந்தின் வெளிநாட்டு மற்றும் வர்த்தக அமைச்சின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிரிவின் பிரதேச முகாமையாளர் அண்ட்ரூ நீட்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். பரஸ்பரம் ஆர்வமுள்ள பரந்த அளவிலான விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன. வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, பாதுகாப்பு, மக்களுக்கிடையிலான பரிமாற்றம், கல்வி முதல் விளையாட்டு மற்றும் சுற்றுலா…

Read More