Latest | சமீபத்தியது 

பண்டிகைகாலத்தில் அதிகரித்த கட்டணத்தை அறவிட்டால் அனுமதிப்பத்திரம் இரத்து

பண்டிகைக் காலத்தில் அதிகளவில் கட்டணங்களை அறவிடும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவ்வாறு அதிகளவில் கட்டணத்தை அறவிடும் பேருந்துகளின் போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களும் ரத்து செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய கட்டணத்தை விட கூடுதலான கட்டணங்களை அறவிடும் பஸ் வண்டிகள் பற்றி தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்யலாம். தொலைபேசி இலக்கம் 0112 860 860 என்பதாகும். புறக்கோட்டை – பஸ்டியன் மாவத்தை, கம்பஹா, கடவத்த, பியஹம, கட்டுநாயக்க, கடுவெல, நிட்டம்புவ, களுத்துறை, அளுத்கம, மத்துகம, ஹொரணை, பாணந்துறை, ஹோமாகம, நாவின்ன, பிலியந்தல ஆகிய பஸ்தரிப்பு நிலையங்களிலிருந்து தூர இடங்களுக்கான பஸ் சேவைகள் இடம்பெறவிருக்கின்றன. உரிய முறையில் பஸ் போக்குவரத்து இல்லாத பகுதிகள் பற்றி தொலைபேசி மூலம் முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம். தொலைபேசி இலக்கம் 0112 860 860 என்பதாகும்.

Read More
Latest | சமீபத்தியது 

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் Wei Fenghe, தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர், மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் சீன பாதுகாப்பு அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் தெரியவருகின்றது.

Read More
Latest | சமீபத்தியது 

சுவர்ணமஹால் நிதி நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

அதன்படி ,இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ,இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினது 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 31-1ஆம் பிரிவின் நியதிகளுக்கு அமைய நேற்று முதல் அமுலாகும் வகையில் சுவர்ணமஹால் நிதி நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் இவ்வாறு இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
Latest | சமீபத்தியது 

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 151 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இதன்படி வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 91,926 ஆக அதிகரித்துள்ளது.

Read More
Latest | சமீபத்தியது 

புற்றுநோய் தேங்காய் எண்ணெய் மீள் ஏற்றுமதி ஆரம்பம்!…

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட புற்றுநோய் பதார்த்தமான ´அஃப்லாடொக்சின்´ அடங்கிய தேங்காய் எண்ணெய் மீள் ஏற்றுமதிக்காக கொழும்பு துறைமுகத்தில் உள்ள SAGT முனையத்தில் நங்கூரமிடப்பட்ட பாபரா கப்பலில் ஏற்றதல் ஆரம்பமாகியுள்ளது. இன்று (12) காலை 9.30 மணியளவில் இந்த செயல்முறை தொடங்கியதாக சுங்க ஊடக பேச்சாளர் சுங்க பிரதி பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்தார். கடான ரிபயினரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தேங்காய் எண்ணெய் அடங்கிய 6 கொள்கலன்களே இவ்வாறு மீள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறித்த தேங்காய் எண்ணெய் தொகை கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி இறக்குமதியாளரின் தனியார் கிடங்கிலிருந்து சுங்க அதிகாரிகளின் மேற்பார்வையில் கீழ் கொழும்பு துறைமுகத்தில் உள்ள SAGT முனையத்திற்கு கொண்டு வரப்பட்டது. சுங்க பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் பேரில், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்ரிய , சுங்கத் தடுப்புப் பிரிவு மற்றும்…

Read More
Latest | சமீபத்தியது 

சீனாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்!…

சீன அபிவிருத்தி வங்கியுடன் இன்று (12) 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்தானதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள சீன தூதரகத்தில் குறித்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கடன் தொகை இந்த வாரத்தினுள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More
Latest | சமீபத்தியது 

அரச வெசாக் தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில்…

அரச வெசாக் தின நிகழ்வை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவதளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கண்டியில் பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரச வெசாக் தின நிகழ்வை முன்னிட்டு நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வெசாக் நிகழ்வுகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் அதற்கு மேலும் காலம் இருப்பதாகவும் புத்தாண்டு காலத்தை கொண்டியதன் பிரதிபலனை மே மாத முதல் பகுதியில் அறிந்து கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More