Latest | சமீபத்தியது 

நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை பெற்றுக்கொள்ளல்…

கொவிட் 19 வைரசு தொற்று பரவல் காரணமாக நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக எடுக்கப்படுகின்ற ஏதேனும் தீர்மானங்களை மக்களுக்கு அறிவிப்பது, நீதிச்சேவை ஆணைக்குழுவின் மூலம் அல்லது இந்த ஆணைக்குழுவின் அனுமதியுடன் நீதி அமைச்சினாலேயாகும் என நீதி அமைச்சினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக covid-19 வைரஸ் பரவல் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக அல்லது நீதி அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பாக வேறு தரப்பினரினால் மேற்கொள்ளப்படுகின்ற அறிக்கைகள் அதிகார பூர்வமானது அல்ல என்பதுடன், கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் கீழே குறிப்பிட்டுள்ள நீதிச்சேவை ஆணைக்குழுவின் அல்லது உயர் நீதிமன்றத்தின் இணையத்தளத்தினூடாக அறிவிக்கப்படும் என்றும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிச்சேவை ஆணைக்குழு – www.gov.lk உயர் நீதிமன்றம் – www.supremecourt.lk

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ பிரதமருடன் இப்தார் நிகழ்வில் பங்கேற்றனர்!

முஸ்லிம் மக்கள் சார்பாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் இப்தார் நிகழ்வு இம்முறை கொவிட் கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரது பங்கேற்புடன் இன்று (05) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் மக்களின் பங்கேற்புடன் மிக பிரமாண்டமாக நடைபெறும் இப்தார் நிகழ்வு இம்முறை கொவிட்-19 தொற்று காரணமாக ஒரு சிலரது பங்கேற்புடன் இடம்பெற்றது. முஸ்லிம் கட்சிகள் சிலவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி வருகைத்தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கௌரவ பிரதமருக்கு தெளிவுபடுத்தினர். முஸ்லம் காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ பிரதமரை சந்தித்து நட்பு ரீதியாக கலந்துரையாடியதுடன், இப்தார் நிகழ்விலும் கலந்து கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த நாடாளுமன்ற…

Read More