Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

தனது வீட்டின் முன்னால் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீடின் தந்தைக்கு இன்று (11) அலரி மாளிகையிலிருந்து தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நஷீட் விரைவில் குணமடைய பிரார்த்தித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீடின் தந்தை அப்துல் சதார் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய பிரதமர், நஷீட் அவர்களது நலன் குறித்து விசாரித்ததுடன் அவர் குணமடைவதற்காக ஏதேனும் உதவிகள் தேவைப்படின் அது குறித்து அறிவிக்குமாறும் குறிப்பிட்டார். கடந்த ஆறாம் திகதி இரவு மாலைத்தீவில் உள்ள அவரது வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறிக்கொண்டிருந்த போது மொஹமட் நஷீட் அவர்கள் இக்குண்டு வெடிப்பிற்கு இலக்காகினார். குண்டு வெடிப்பில் பலத்த காயமடைந்த அவர் 16 மணிநேர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இதுவரை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Read More
Uncategorized 

இலங்கையில் ஜனவரி முதல் இதுவரை 80,068 பேருக்கு கொரோனா

2021 ஜனவரி முதல் மே 9 ஆம் திகதி காலைவரையில் நாட்டில் 80 ஆயிரத்து 68 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி ஜனவரி மாதம் 20 ஆயிரத்து 696 பேரும், பெப்ரவரி மாதம் 19 ஆயிரத்து 85 பேரும், மார்ச் மாதம் 9 ஆயிரத்து 463 பேரும், ஏப்ரல் மாதம் 15 ஆயிரத்து 440 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளர். அத்துடன் இம்மாதத்தில் மே 1 முதல் 11 ஆம் திகதி காலைவரை 20 ஆயிரத்து 384 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. மேல் மாகாணத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

2 நாட்களில் 15 வோர்ட் தொகுதியை நிர்மாணிக்கும் திட்டம்…

48 மணித்தியாலங்களில் 15 வோர்ட் தொகுதியை நிர்மாணிக்கும் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வழிகாட்டலின் கீழ் கொரோனா நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்ட பிரதேசங்களில் முதல் கட்டமாக 15 வைத்தியசாலைகளில் இந்த வோர்ட் தொகுதிகள் அமைக்கப்படவுள்ளன. பசில் ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இது அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வோர்ட் தொகுதி 50 கட்டில்களை உள்ளடக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

பசுமை சமூக பொருளாதார மாதிரி ஒன்றை நோக்கி விசேட ஜனாதிபதி செயலணி…

காலநிலை மாற்றங்களுக்கு பேண்தகு தீர்வுகளுடன் பசுமை சமூக பொருளாதாரம் ஒன்றை இலங்கையில் ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைத்துள்ளார். “காலநிலை மாற்றங்களுக்கு பேண்தகு தீர்வுகளுடன் பசுமை இலங்கையை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணி“ என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி பெசில் ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான இந்த செயலணிக்கு ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் ஒரு ஆளுநர், 14 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 46 பேர் கொண்ட குழு இதில் அங்கம்வகிக்கின்றது. அமைச்சர்களான ஆர்.எம்.சி.பீ.ரத்னாயக்க, சமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, மஹிந்தானந்த அழுத்கமகே, ரமேஷ் பத்திரன, ஆளுநர் அனுராதா யஹம்பத், இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, அருந்திக்க பெர்ணாண்டோ, ரொஷான் ரணசிங்க, கனக ஹேரத், ஜானக்க வக்கும்புர, மொஹான் டி சில்வா, விமலவீர திசாநாயக்க, காஞ்சன விஜேசேகர, சதாசிவம்…

Read More